நெல்லையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும், த.ம.மு.கழகத்தின் தலைவருமான ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராக தேர்வு!

நெல்லையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும், த.ம.மு.கழகத்தின் தலைவருமான ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராக தேர்வு!

நெல்லையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும், த.ம.மு.கழகத்தின் தலைவருமான ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராக தேர்வு!

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில், நெல்லையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் வெற்றிபெற்றுள்ளார். பார் கவுன்சில் தேர்தலில் முதல் வெற்றியாளராகத் தேர்வாகியிருக்கும் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. அத்தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தம் 54,000 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தேர்தலில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 192 பேர் போட்டியிட்டனர். பெண்கள் சார்பாக மூவர் போட்டியிட்ட நிலையில், வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில், 108 என்ற எண்ணில் போட்டியிட்ட நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரிசில்லா பாண்டியன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதன் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் வழக்கறிஞர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, தென் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞருக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது நெல்லை மாவட்ட வழக்கறிஞர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் இருந்து 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில், பிரிசில்லா பாண்டியன் 9-வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது வெற்றி பெற்றுள்ள 25 உறுப்பினர்களும் இணைந்து, பார் கவுன்சிலுக்கான புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்வு செய்வார்கள். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரிசில்லா பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: