வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார் சாலை எனப் பெயர் மாற்றம், கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் வ.உ.சி முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வ.உ.சி பேரவை அமைப்புச் செயலாளர் திரு. ரவி மற்றும் பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரு. அப்பு சந்திரசேகரன், திரு. ஹரிஹரன், திரு. கே.பி.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலினையும் பல்வேறு சங்க அமைப்பினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: