தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கடந்த 2014-ம் ஆண்டு 396 பேரும், 2015ம் ஆண்டு 452 பேரும், 2016ம் ஆண்டு 852 பேரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அலுவலகத்தின் உதவியுடன் இலங்கை திரும்பி இருந்தனர்.

நேற்றைய தினம் மட்டும் வேலூர் முகாமில் இருந்து 57 அகதிகள் நாடு திரும்பியதுடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 809 பேர் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983-ம் ஆண்டுக்குப் பின்னர் பல லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றிருப்பதுடன், அவர்களில் 62,629 பேர் இந்தியாவில் உள்ள 107 முகாம்களிலும், 36,794 பேர் முகாம்களுக்கு வெளியில் பல்வேறு பகுதிகளிலும் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாளைய தினம் 36 பேர் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பவிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: