தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்

‘தமிழகத்தில் மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும், ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்’ என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news

மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார்.தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலர் கோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளை சேர்ந்த 1.27 கோடி வீடுகளில், இதுவரை 46.33 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கட்டடங்களுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை, மத்திய அமைச்சர் பாராட்டினார்.குடிநீர் இணைப்புகளை உரிய முறையில் பராமரித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இத்திட்டத்திற்கான குடிநீர் ஆதாரங்களை மேமம்படுத்தவும், பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து வீடுகளுக்கும் படிப்படியாக, கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க வேண்டும்.

மக்களிடம் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், பிரகலாத் சிங் பட்டேல் அறிவுறுத்தினார். இந்த தகவல்களை, செய்திக்குறிப்பு வாயிலாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: