கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மக்கள்!

சென்னையில் உள்ள நீயூ ஹோப் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் (வயது 55). சென்னையில் இவருக்கு இரண்டு மருத்துவமனைகள் சொந்தமாக உள்ளன.

100 மேற்பட்டவர்களை மருத்துவம் பார்த்து குணமாக்கிய இந்த மருத்துவர், சென்ற ஏப்ரல் மாதம் அடையாளம் தெரியாத நோயாளிக்கு மருத்துவம் பார்த்தில், இவருக்கு கொரோனா ஒட்டிக் கொண்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று (19-04-2020) இரவு சுமார் 9 மணிக்கு இறந்து போனார். பின்னர் அவரது உடலை மருத்துவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

[காணொளியில் மருத்துவர் பாக்கியராஜ் (அடக்கம் செய்யப்பட்ட போது உடனிருந்தவர்)]

குடும்பத்தினர் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள டி.பி. சத்திரம் இடுகாட்டில் இறுதி சடங்கு செய்ய எண்ணினர். இறந்த மருத்துவருடன் அவரது உடன் பணியற்றிய மருத்துவர்கள் சிலரும், மருத்துவரின் மனைவி மற்றும் அவரது மகனான மருத்துவர் பிரதீப்-ம் இடுகாட்டிற்கு செல்ல நினைத்தபோதே, அந்த இடுகாட்டில், 100 மேற்பட்ட பொது மக்கள் கொரோனா தொற்றில் இறந்தவரின் உடலை அங்கு புதைக்கக் கூடாது என போராட்டத்திற்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. புதைத்தால், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவி விடும் என்ற தவறான புரிதல் காரணமாகவே பொது மக்கள் தடுத்துள்ளதாக செய்திகள் வருகிறது. இதனால், சென்னை வேலங்காடு என்ற இடுகாட்டிற்கு இறந்தவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

என் கணவரின் கடைசி ஆசைப்படி அடக்கம் செய்யுங்கள்…. கதறி அழும் டாக்டர் சைமனின் மனைவி! 

 

அந்த இடுகாட்டில், ஜெ.சி.பி இயந்திரம் ஆறாடி குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, சுமார் 50-60 ஆட்கள் கற்களை கொண்டும் தடிகளைக் கொண்டு உடல் எடுத்து வந்த வெளியில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை தாக்கியுள்ளனர். அதோடு வாகன ஓட்டுனரை தாக்கியதில், அவர் காயமடைந்தார். அங்கு நின்றிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். மாநகராட்சி பணியாளர்கள் அந்த இடத்தில் நிற்க விடாமல் விரட்டப்பட்டனர். போராட்டக்காரர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அங்கு வந்திருந்தோர் அனைவரும் ஒடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

மருத்துவர் பிரதீப் உடனே, சுகாதாரத்துறை அமைச்சரை இரவு 11 மணிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். பின்னர், அவர்களுக்கு காவல்துறையினர் உதவியோடு இடுகாட்டில் இறந்தவரின் உடலை தங்களில் உதவியோடு அடக்கம் செய்யப்பட்டது.

இரவு போராட்டத்தில் ஈடுபட்டோர் என 20 பேர் அடையாளம் காணப்பட்டு கைதும் இன்று செய்யப்பட்டுள்ளனர்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: