மக்கள் விரோத போக்கில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..!!

ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் ஒன்றிய அரசு செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: