தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு அருகே உள்ள, முத்துராயன் குட்டை மலைப் பகுதியில், பாறை ஓவியங்கள், பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்ட, அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில், முத்துராயன் குண்டு மலைப்பகுதியில், சமீபத்தில், கள ஆய்வு நடந்தது. அதில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல, தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிற்கு அருகே உள்ள, முத்துராயன் குட்டை, ஊர் குட்டை மலைப்பகுதியில், பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கறுப்பு – சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், கல் ஆயுதங்கள், கல் வீடுகள், இரும்பு உருக்கியதற்கான கழிவுகள் கிடைத்துள்ளன.

மேலும், இரும்பு கோடரியின் உடைந்த பகுதி, இரும்புக் கழிவுகள் படிந்த பாறைப் பகுதிகள், பாறை ஓவியங்கள் உள்ளிட்டவை, பல ஏக்கர் பரப்பளவில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில், இரும்புக் கழிவுகள், கல் ஆயுதங்கள், உடைந்த மண் குடுவைகள், வாழ்விடம் இருந்ததற்கான அடையாளமாக கல் குவியல்கள் ஆகியவை, இப்பகுதியில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ளன. மலைக் குன்றை சுற்றி, பல இடங்களில், வெண்மை நிற ஓவியங்கள் உள்ளன. அவற்றில், தடிமனான கோட்டோவிய மனிதன், மயில், முக்கோணம், செவ்வக வடிவங்களில் வீட்டின் அடையாளம், கால்நடைகளின் உருவங்கள் உள்ளிட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. மலைப்பகுதி எங்கும், வரலாற்று தடயங்கள் கிடைப்பதால், அப்பகுதியை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>