மன்னார் வளைகுடா தீவுகளில் மண் அரிப்பை தடுக்கும் பவளப்பாறைகள்!

மன்னார் வளைகுடா தீவுகளில் மண் அரிப்பை தடுக்கும் பவளப்பாறைகள்!

மன்னார் வளைகுடா தீவுகளில் மண் அரிப்பை தடுக்கும் பவளப்பாறைகள்!

சாயல்குடி:

மன்னார் வளைகுடா தீவுகளில் மண் அரிப்பை தடுக்கும் அரிய வகை பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. சாயல்குடி அருகில் உள்ள மேலமுந்தல் அருகே நல்லதண்ணீர் தீவும், மாரியூர் அருகே புளுகுனிசல்லிதீவும், மூக்கையூர் அருகே உப்புத்தண்ணீர் தீவும் அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா தேசிய கடல்வாழ் உயிரின சரகத்தின் கட்டுப்பாட்டில் தீவுகள் உள்ளன. இந்த கடற்கரை கிராமங்களுக்கும் தீவுகளுக்கும் 3 முதல் 5 கி.மீ., இடைவெளி உள்ளது. ராமேஸ்வரத்தில் 7 தீவுகளும், கீழக்கரையில் 7 தீவுகளும், கடலாடி, துாத்துக்குடி பகுதியில் 7 தீவுகளும், என 21 தீவுகள் உள்ளன.

இவற்றில் ஐந்து வகை பவளப்பாறைகளை கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் பூ, கிண்ணம், மான் கொம்பு, மூளை வடிவம் ஆகிய கோரல்ஸ் என்ற 4 வகை பவளப்பாறைகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மீனவர்கள், கடல் பகுதி, தீவுகளில் உள்ள பவளப்பாறைகளை கரையோரம் கொண்டு வந்து சரக்கு வாகனங்களில் ஏற்றிற்பனைக்கு அனுப்பி வந்தனர். இவற்றில், அதிகளவு இயற்கை கால்சியம் சத்து இருப்பதால், ஆலைகள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் தடை உத்தரவால் தற்போது மன்னார் வளைகுடா தீவுகளில் பவளப்பாறை பெருகி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் 40 பேர் 21 தீவுகளிலும் வன வேட்டைத்தடுப்பு காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


மன்னார் வளைகுடா;

மன்னார் வளைகுடா (Gulf of Mannar) என்பது இந்தியப் பெருங்கடலில் இலட்சத் தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் (100 முதல் 125 மைல்) அகல இடத்தில் அமைந்துள்ளது. தாழ் தீவுகளையும் கற்பாறைகளையும் கொண்ட இராமர் பாலம் மன்னார் வளைகுடாவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையில் இருந்து பிரிக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறும் இலங்கையில் உள்ள அருவி ஆறும் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.

560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

வன அலுவலர் ஒருவர் கூறுகையில்,

‘வன வேட்டைத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்ட பின், தீவுகளில் 40 சதவீதம் பவளப்பாறைகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்கள், மீன்களின் புகலிடமாக விளங்குகிறது. தீவுப்பகுதி கரையோரங்களில் பேரலைகளால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் அரணாக உள்ளது, என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: