சோழர் காலத்து கோயிலில் மாயமான கலசம்!

சோழர் காலத்து கோயிலில் மாயமான கலசம்!

சோழர் காலத்து கோயிலில் மாயமான கலசம்!

அரியலூரில் உள்ள கோயில்களில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழைமையான சோழர் கால கோயிலில் கலசத்தைத் திருடியது இரிடியம் எனக் கூறும் கும்பலா எனப் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலைக் கடத்தல் விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கோயில்களிலிருந்து திருடுபோன பல சிலைகளையும் வெளிநாட்டில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல சிலைகளையும் மீட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் சிலை திருட்டுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனிடையே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழைமையான சோழர்காலத்து கோயிலில் கலசம் திருடப்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரியலூர் மாவட்டம், உடையார் பாளையத்தில் உள்ளது பெரிய கோயில். இது சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயில் உள்ள அம்மன் கோயில் கோபுரத்தில் இருந்த 2 அடி உயரமுள்ள 5 கிலோ எடையுள்ள கலசத்தைக் காணவில்லை. இது குறித்து ஜமீன் கோயில் தர்மகர்த்தா ராஜ்குமார் பழனியப்பன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரிடியம் இருப்பதாகக் கூறி கோயில் கலசம் திருடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: