தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் ராஜகுரு, ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சுதர்சன், மனோஜ் ஆகியோர் தொண்டி அருகே உள்ள சுந்தரபாண்டியபட்டினத்தில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது இங்குள்ள ஐயாகுளத்தின் கரையில் சோழர்கால சுடுமண் உறைகிணறு, சீன நாட்டு பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குளத்தில் மண்ணில் புதைந்த நிலையில் உறை கிணறு உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, செருகுவது என இருவகைகள் உண்டு. இங்குள்ள கிணறு ஒன்றன் மீது ஒன்று அடுக்கி இடையில் களிமண்ணால் பூசப்பட்டுள்ளது.

குளத்தின் கரையில் சீன நாட்டு பானை ஓடுகள் சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத்தாதுகள், சுடுமண், கூரை ஓடுகள் வட்ட சில்லுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ராஜகுரு கூறுகையில், ‘‘குளத்தின் அருகில் 7 அடி சுற்றளவில் கிணறு உள்ளது. உறைகள் ஒவ்வொன்றும் 15 செ.மீ. உள்ளது. குளத்தின் வடக்கே மரைக்காயர் குளம் உள்ளது. இக்குளம் நிரம்பி உபரி நீர் ஐயாகுளத்திற்கு வருவதற்கு ஏற்றார்போல் சுடுமண் குழாய்கள் உள்ளன. தண்ணீர் வற்றிய காலங்களில் இக்குளத்தை பயன்படுத்த ஒரே காலக்கட்டத்தில் 2 குளங்களும் வெட்டப்பட்டுள்ளது.

சீன பானை ஓடுகளில் போர்சலைன், செலடன் என இருவகை உண்டு. பாசி நிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மண்பாண்டங்களில் பச்சை, சாம்பல், பழுப்பு நிறங்கள் உண்டு. சேமித்து வைக்கும் பெரிய பாத்திரங்களும் இதில் செய்யப்படும். இவ்வகை ஓடுகள்தான் இங்கு கிடைத்துள்ளன. இங்குள்ள சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் சுத்தவலியான சுந்தரபாண்டியபுரம் என இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘புரம்’ என்பது வணிக நகரத்தை குறிக்கும். கிபி 11ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையிலும் இவ்வூர் வணிகத்தில் சிறந்து விளங்கியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன’’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: