பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது. அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு பாராஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பதக்கம் வென்றார். 2016ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றார். தற்போது நடந்து முடிந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5ம் தேதி நிறைவடைந்தது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரியோவில் நடந்த 2016 பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 ஜனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. இந்திய அரசு இவருக்கு ஆகஸ்டு, 2020-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைத்துள்ளது.
நன்றி : தினகரன்