பாடுபட்டு மீட்ட சென்னை நகரை தமிழர் நகரமாக தக்க வைக்க உறுதி ஏற்போம். ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் பாராட்டிய சென்னை மாநகருக்கு இன்று வயது 377!

பாடுபட்டு மீட்ட சென்னை நகரை தமிழர் நகரமாக தக்க வைக்க உறுதி ஏற்போம். 'தருமமிகு சென்னை' என்று வள்ளலார் பாராட்டிய சென்னை மாநகருக்கு இன்று வயது 377!

பாடுபட்டு மீட்ட சென்னை நகரை தமிழர் நகரமாக தக்க வைக்க உறுதி ஏற்போம். ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் பாராட்டிய சென்னை மாநகருக்கு இன்று வயது 377!

1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலம் ஆனது. அப்போது சென்னை நகரத்தை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று தெலுங்கர் பொட்டி ஸ்ரீராமுலு சென்னை இராயப்பேட்டையில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டார். “மதராஸ் மனதே” என்ற முழக்கத்தோடு பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச் சென்ற ம.பொ.சியிடம் பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி., “சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்” என்று பதிலளித்தார்.

ம.பொ.சி., “தன் தலையைக் கொடுத்தேனும் தலை நகரைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், தமிழக முதல்வர் இராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில் கட்சி சார்பற்ற நிலையில் பெரும் கூட்டத்தை கூட்டினார்.

அத்துடன் உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டச் செய்து “தலைநகரம் தமிழருக்கே” என்பது பற்றிய தீர்மானத்தையும் கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தந்தி வடிவில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சென்னை மாநில முதல்வர் ஆகியோருக்கு மேயரால் அனுப்பப்பட்டது.

கடைசியாக 25-03-1953 அன்று தில்லி நாடாளுமன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிடுகையில், “ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்” என்று அறிவித்தார்.

தலை நகரைக் காப்பாற்ற உறுதுணையாய் நின்ற தலைவர்கள் கூடத் தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்னையில் ம.பொ.சி.க்கு கை கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்பில் ம.பொ.சி.யின் பங்களிப்பை வரலாறு உணர்த்தும். “தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டவும் பயிற்சி மொழியாகத் தாய் மொழியாம் தமிழ் மொழியே இருக்க வேண்டும் என்றும் அறப்போர் நடத்தினார். ஆங்கிலேயர் வடிவமைத்திருந்த சென்னை மாநகராட்சியின் கொடியை மாற்றி, சேர, சோழ, பாண்டியரின் வில், புலி, மீன் ஆகியவற்றைப் பொறித்தார்.

இப்படி பாடுபட்டு மீட்ட சென்னையை தமிழர்கள் நாம் தக்க வைக்க வேண்டும். எங்கு திரும்பினாலும் இந்தியர்கள் தான் சென்னை முழுவதும் நிரம்பி உள்ளனர். சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழ் இல்லை, பெயர் பலகையில் தமிழ் இல்லை, காவல்துறை வாகனங்களில் தமிழ் இல்லை, வங்கிகளில் தமிழ் இல்லை, சாலைகளில் தமிழ் இல்லை, நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழ் இல்லை. சென்னையில் உள்ள பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை. இவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிவதில்லை. சென்னையில் இயங்கும் நிறுவனங்கள் எவற்றிலும் தமிழ் இல்லை. சென்னை தமிழர்களின் நகரமாக மாற்ற தமிழக அரசு தவறி விட்டது. இந்த அவல நிலையை தமிழர்களாகிய நாம் தான் மாற்ற முன்வர வேண்டும். அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சென்னை நகரை தமிழர் நகரமாக தக்க வைக்க இந்நாளில் உறுதி ஏற்போம். வாழ்க சென்னை மாநகரம் !

– தமிழர் என்று சொல்வோம்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: