சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா! அருகில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

65 வயது முதியவர், தொடங்கி 18 வயது இளைஞர் வரை 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்க்ளுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: