நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் :வேலூர் சிஎம்சி, லயோலாவும் சிறந்த கல்லூரிகளாக தேர்வு!!

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. அதேபோல், சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும்பொருட்டு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும்பொருட்டு கடந்த 2016 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.இதற்கான உருவாக்கப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்), மாணவா்கள் தோ்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

இதில், பொதுப்பிரிவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஐஐஎஸ்சி பெங்களுரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை முன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.சென்னை ஐஐடி தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.திருச்சி என்ஐடி கல்வி நிறுவனம் 9ம் இடத்தை பிடித்துள்ளது.

ஆய்வுப்பிரிவில் முதலிடம் -;ஐஐஎஸ்சி பெங்களுரு, 2ம் இடம் சென்னை ஐஐடி, 3 ம் இடம் -ஐஐடி மும்பை பெற்றுள்ளது.

சிறந்த மருத்துவக்கல்லூரி பிரிவில் முதலிடம் – டெல்லி எய்ம்ஸ், 2ம் இடம் – சண்டிகர் PGIMER, 3ம் இடம் – வேலூர் சிஎம்சி பெற்றுள்ளது.சென்னை மருத்துவ கல்லூரி 12ம் இடத்தை பிடித்துள்ளது.புதுச்சேரி ஜிப்மர் 8வது இடத்தை பிடித்துள்ளது.போரூர் ராமச் சந்திரா மருத்துவ கல்லூரி 12ம் இடத்தை பிடித்துள்ளது.

சிறந்த கல்லூரி பிரிவில், சென்னை லயோலா கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.முதலிடம் – டெல்லி மிரண்டா ஹவுஸ் கல்லூரி, இரண்டாமிடம் – எல்.எஸ்.ஆர். பெண்கள் கல்லூரி, டெல்லி.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: