அலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்!

அலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்!

அலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்!

பொங்கலுக்கு ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) போட்டிகள் நடக்குமா?அலங்காநல்லூரில் பயிற்சிகள் மும்முரம்;

எப்படியும் வரும் ஜனவரியில் ஏறுதழுவுதல் நடத்த அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அலங்காநல்லூர் பகுதி மக்கள் காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். மாடு பிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஏறுதழுவுதல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. பாரம்பரியம் மிக்க அலங்காநல்லூர் ஏறுதழுவுதலை காண இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏறுதழுவுதல் ஆர்வலர்கள் வந்து செல்வர். சர்வதேச விலங்கின பாதுகாப்பு அமைப்பான பீட்டா மற்றும் விலங்குகள் நலவாரியத்தால், ஏறுதழுவுதல் ஓர் ஆபத்தான விளையாட்டு என்றும், இதனால் ஏற்படுவதாகவும், காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஏறுதழுவுதல்க்கு நீதிமன்றம் தடை விதித்தது. நீதிமன்றம் தடை விதித்த போதும், மாநில அரசின் நடவடிக்கையால் விலங்குகள் நலவாரிய மேற்பார்வையில் ஏறுதழுவுதல் நடந்து வந்தது.

தமிழக அரசின் மெத்தனப்போக்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடைபெறவில்லை. இதனால் பொங்கல் பண்டிகை களையிழந்தது. ஏறுதழுவுதல் ஆர்வலர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். களத்தில் கலக்கி, வாகை சூடிய காளைகள், பல இடங்களில் அடிமாட்டிற்காக விற்கப்படும் அவலமும் நடந்தது. விற்க மனமில்லாத பெரும்பாலான ஏறுதழுவுதல் ஆர்வலர்கள் காளைகளை தொடர்ந்து வளர்த்து வருகின்றனர். ஏறுதழுவுதல் நடைபெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. எப்படியும் நடக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். மண்ணை முட்டி தள்ளுவது, நீச்சல் பயிற்சி என காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில்;

மார்கழி மாதம் தொடங்கிவிட்டாலே ஏறுதழுவுதல் துவங்கிவிடும். இதற்காகவே தலைமுறை தலைமுறையாக காளைகளை வளர்த்து வருகிறோம். தமிழர்களின் வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அடையாளமாக ஏறுதழுவுதல் உள்ளது. இந்த ஆண்டாவது ஏறுதழுவுதல் நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய முயற்சி எடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடக்கவில்லை. எனவே காளைகளை பராமரிக்க முடியாமல் விற்று விட்டோம். ஏறுதழுவுதல் நடப்பது உறுதியானால், எத்தனை லட்சம் செலவழித்தாவது காளைகளை வாங்கி விடுவோம். அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் ஏறுதழுவுதல், இப்பகுதி மக்களுக்கு பெரிய திருவிழாவாகும். இதற்காகவே தலைமுறை தலைமுறையாக காளைகளை வளர்த்து வருகிறோம். நாங்கள் 2 காளைகள் வளர்த்து வந்தோம். இதில் ஒரு காளை இறந்து விட்டது. அதற்கு சமாதி அமைத்து வழிபட்டு வருகிறோம். தமிழர்களின் வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அடையாளமாக உள்ளது ஏறுதழுவுதல். வரும் பொங்கலுக்கு ஏறுதழுவுதல் நடத்த மத்திய, மாநில அரசுகள் இந்த மண்ணின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.

சிங்கம்புணரி பகுதியில் ஏறுதழுவுதல் காளைகளுக்கான மணிகள் செய்யும் பணி தீவிரம்;

சிங்கம்புணரி பகுதியில் ஏறுதழுவுதல் நடைபெறும் என்ற நம்பிக்கையில் ஏறுதழுவுதல் காளைகளின் கழுத்தில் அணிவிக்கப்படும் மணிகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காளைகளுக்கான மணிகள்;

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் ஏறுதழுவுதல் போட்டி நடைபெறவில்லை. ஏறுதழுவுதல் தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தாலும் ஏறுதழுவுதல் போட்டி இந்த ஆண்டு நடைபெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இந்தநிலையில் ஏறுதழுவுதல் போட்டி நடைபெற தடை உள்ள போதிலும் காளைகளுக்கு கழுத்தில் அணிவிக்கப்படும் மணிகள் செய்யும் பணி சிங்கம்புணரி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்!

அலங்காநல்லூர் பகுதியில் ஏறுதழுவுதலில் மல்லுக்கட்ட காளைகளுக்கு பயிற்சி; களத்தில் கலக்க காளைகள் ஆயத்தம்!

மஞ்சுவிரட்டு;

இதேபோல் தை மாதத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தடை உள்ளதால் நடைபெறவில்லை. இருந்தாலும் இப்பகுதி மக்கள் பொங்கல் பண்டிகையின்போது ஏறுதழுவுதல் காளைகளை மணிகள் கட்டி அலங்காரம் செய்து ஊர்வலம் நடத்துவார்கள். தை மாதம் பிறக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சலங்கைகள், வண்ணமயமான நூலில் செய்யப்பட்ட பந்து வெண்கலம், மணிகள் செய்து கோர்க்கும் பணி தொடங்கி உள்ளது.

சிங்கம்புணரி பகுதியில் காளை மாடுகளுக்கு சலங்கை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர் கூறியதாவது;

வாழ்வாதாரம்;

இந்த சலங்கை கட்டும் பணி ஆண்டுக்கு ஒரு முறைதான் நடைபெறும். காளைகள் வைத்து இருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிகட்டு அனுமதி இருக்கும் காலங்களில் எங்களுக்கு ஏராளமான மணிகள் செய்யுமாறு பணிகள் வந்த வண்ணம் இருக்கும். எங்களால் முடிக்க முடியாத அளவிற்கு கூட மணிகள் செய்யும் பணிகள் இருக்கும். தற்போது ஏறுதழுவுதல்க்கு தடை உள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்து உள்ளது. முன்பு சிங்கம்புணரியை சுற்றி உள்ள கிராமங்கள் மட்டுமின்றி ஏறுதழுவுதல்க்கு புகழ்பெற்ற அரளிப்பாறை, சிராவயல், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதியில் இருந்தும் கூட சலங்கை மணிகளை இங்கு வந்து செய்ய சொல்லி, வாங்கி செல்வார்கள்.

பலவகை மணிகள்;

இவ்வாறு செய்யப்படும் ஏறுதழுவுதல் காளைகளுக்கான மணிகளில் பல வகை உண்டு. நான்கு பல் கொண்ட மணி, ஆறு பல் கொண்ட மணி, எட்டு பல் கொண்ட மணி, அரியக்குடி மணி, கும்பகோணத்து மணி, ஆக்கை மணி என பல வகை மணிகள் உள்ளன. ஏறுதழுவுதல் நடைபெறவில்லை என்றாலும், நமது பாரம்பரியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் வருகிற பொங்கல் பண்டிகையின் போது ஏறுதழுவுதல் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு நடைபெறவில்லை என்றாலும் ஏறுதழுவுதல் பிரியர்கள் காளைகளை அழகுப்படுத்துவதற்காகவே இந்த சலங்கை மணிகளை வாங்குவார்கள். மேலும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சிலர் தற்போதே ஏறுதழுவுதல் காளைகளுக்கான சலங்கை மணிகள் செய்ய கேட்டுள்ளனர். அதன்படி சலங்கை மணிகளை செய்து வருகிறோம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>