‘ஹைக்கூ உலகத்தைத் தொடங்கி வைத்தது பாரதி’ – நெகிழ்ந்த ஈரோடு தமிழன்பன்

erode_thamilanban

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஹைக்கூ கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் ஹைக்கூ கவிதைகள் மிகவும் பிரபலம். இது நவீன இலக்கிய வடிவம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால், ”நூறாண்டுகளுக்கு முன்பே பாரதி ஹைக்கூ கவிதை எழுதியுள்ளார்” என்ற ருசிகரத் தகவலைத் தெரிவித்தார் பிரபல கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

மரபுக் கவிதைகளை விட, ஹைக்கூ கவிதைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் இதை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமின்றி, பல தரப்பினரும் ஹைக்கூ கவிதைகளை நேசிக்கிறார்கள். இது, ஜப்பானில் உருவான நவீன இலக்கிய வடிவம் ஆகும்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் பேசிய பிரபல கவிஞரும் சென்னை தொலைக்காட்சியின் ஒய்வுபெற்ற செய்தி வாசிப்பாளருமான ஈரோடு தமிழன்பன், ”ஹைக்கூ கவிதை என்பது நூறாண்டுகளுக்கு முன்பு பாரதியாரால் முதன்முதலில் எழுதப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கவிதை வடிவம் நூறாண்டுகளைக் கடந்துவிட்டது. இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் ஆயிரத்துக்கும் அதிகமான ஹைக்கூ கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சமூக அவலங்களை அதிகமாக வெளிப்படுத்துவதுதான் ஹைக்கூ கவிதைகளின் தனிச்சிறப்பு. ஒரு பெரிய கட்டுரையில் சொல்லக்கூடியதை ஒருசில வரிகளில் எளிதாக ஹைக்கூ சொல்லிவிடுகிறது” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: