காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது!

காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு - தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது!

காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது!

கர்னாடாகாவில் சில தினங்களாக தமிழர்களுக்கு எதிரான போராட்டம், பேருந்து எரிப்பு போன்றவை நடந்தேறி வருகிறது. இதன் எதிர்வினையாக இங்கு தமிழர்கள் பலர் கன்னட கடைகள் பேருந்துகளை உணர்ச்சி வேகத்தில் உடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக தனியார் சொகுசு பேருந்தை நேற்று மாலை தமிழர் முன்னேற்ற கழக அதியமான் மற்றும் அவரது தோழர் ஒருவர் இடை நிறுத்தி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் அங்குள்ள கன்னடர்கள் அங்குள்ள காவல்துறையிர் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதி காக்கின்றனர். மேலும், கலவரகாரர்களுக்கு, துணையாக அங்கு கன்னட காவல்துறை செயல்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் சட்ட, ஒழுங்கை காரணம் காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலே, அவர்களை காவல்துறை கைது செய்கிறது.

தமிழர் முன்னேற்ற கழக தலைவர் அதியமான் மற்றும் உடனிருந்த தோழர் மீது கர்நாடக பேருந்தை அடித்து நொருக்கினர் என்றும், பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தார் என்றும், தமிழக காவல்துறை இன்று கைது செய்து வழக்கு போட்டு, புழல் சிறை அடைத்துள்ளனர்.

அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் எனவும் அதற்காக உறுதுணையாக உலகத் தமிழர் பேரவை செயல்படும் என்று இந்த நேரத்தில் நாம் சொல்லக் கொள்கிறோம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: