தேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், ஆரோக்ய ராஜீவ், அமல்ராஜ் உள்பட 17 பேர் அர்ஜூனா விருது பெறுகிறார்கள்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கு விருதுக்கு தகுதியானவர்களை மேனாள் உச்ச நீதி மன்ற நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்தது. அதற்கு ஒப்புதல் அளித்து விருது பட்டியலை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருதுக்கு, காந்தி (தடகளம்), ஹீரா கட்டாரியா (கபடி) உள்ளிட்டோர் தேர்வு பெற்றனர்.
இந்தியாவில் ஆக., 29ம் தேதி, விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. அன்று, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்குவார்.