‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ – தொல்லியல் அறிஞர்கள் வேதனை!

'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்' - தொல்லியல் அறிஞர்கள் வேதனை!

‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ – தொல்லியல் அறிஞர்கள் வேதனை!

‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ என, தொல்லியல் அறிஞர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அழிந்து வரும் தொல்லியல் சின்னங்கள் பற்றி, தொல்லியல் அறிஞர்கள் கூறியதாவது:

உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் வரலாற்று சான்றுகளாக, பழமையான பொருட்களும், கட்டடங்களும் உள்ளன. அவற்றை, நம் முன்னோர் பாதுகாத்து வந்தனர்.

ஆனால், தற்போதுள்ள இளைய தலைமுறையினர், பழமையான பொருட்களை, பழைய பொருட்களாக எண்ணுகின்றனர். அதன் வெளிப்பாடாக, கோவில் சுவர், துாண்களில் எழுதுவது, சிலைகளை உடைப்பது, சிதிலம் அடைந்த பழமையான கட்டட பொருட்கள், கற்சிலைகளை, தமக்கான கட்டுமானங்களுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதுபோன்ற செயல்களில் இருந்து, நம் பாரம்பரிய சின்னங்களை மீட்கும் முயற்சியாக, அரசு, மாணவர்களுக்கு, தொல்லியல் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். தொல்லியல் பாதுகாப்பு மன்றங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மரபு சின்னங்கள் உள்ள ஊர் மக்களுக்கு, அதன் பெருமைகளை விளக்கி, பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். அதற்கு தேவையான பணியாளர்களை, தொல்லியல் துறை யில் நியமிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், பழமையை இழந்தால், நம் பெருமையையும் இழக்க நேரிடும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுாருக்கு அருகே அழிந்துவிட்ட, 14ம் நுாற்றாண்டு கோவில் பற்றி, ‘அறம்’ வரலாற்று மைய தலைவர் கூறியதாவது:

ஓசூருக்கு அருகே உள்ள பாகலுாரில் இருந்து, பேரிகை போகும் வழியில், இடதுபுறம், திம்மராய சுவாமி கோவில் உள்ளது. அங்கு இருந்த கல் மண்டபம், கல்வெட்டுகள், துாண்கள் உள்ளிட்டவை, முழுமையாக சிதைந்து உள்ளன. கடந்த, 1974ல், அங்கு நான்கு கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. தற்போது, அந்த கல்வெட்டுகள் இல்லை. ஆனால், நிறைய துண்டு கல்வெட்டுகள் உள்ளன.

தற்போது, திம்மராய சுவாமி கோவில் என, ஊர் மக்களால் அழைக்கப்படும் இக்கோவிலில், ‘திருவத்தியூர் பெருமாள்’ என்ற பெயர் இருந்ததை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. துாணில், அனுமன் சிற்பம் உள்ளதால், பெருமாள் கோவிலாக இருந்ததை அறிய முடிகிறது. ‘கங்காண்டை நாயன்’ என்ற பெயர் ஒரு கல்வெட்டில் உள்ளது. அது, அக்கோவிலை கட்டிய குறுநில மன்னர் பெயராக இருக்கலாம்.

மண்ணில் புதைந்துள்ள இக்கோவிலின் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தால், வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம்.

உலக மரபு சின்னங்கள் வாரத்தில், இதுபோன்ற பழமையான கட்டடங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்த, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>