இன்று தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் மாநில நாள் நவம்பர் 1 என கொண்டாட காரணமானவர், அமரர் பொட்டி ஶ்ரீராமுலு!

 
இன்று தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் மாநில நாள் நவம்பர் 1 என கொண்டாட காரணமானவர், அமரர் பொட்டி ஶ்ரீராமுலு!
இன்று பெரும்பாலான இந்தியாவின் தென் மாநிலங்கள், நவம்பர் 1ம் தேதியை, தங்கள் மாநில நாள் கொண்டாடி வருகின்றனர். இது 1956-ல் மொழிவழி மாநிலங்கள் பிரிந்து, நவம்பர் 1ம் தேதி இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மொழிவழி மாநிலங்கள் பிரிந்ததன் காரணமாக, நவம்பர் 1ம் தேதியை மாநில நாளாக கொண்டாடி வருகின்றன.
இந்த வரலாற்று நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெற காரணமானவர், ஐயா அமரர் பொட்டி ஶ்ரீராமுலு. ஐயா பொட்டி ஶ்ரீராமுலு அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட வீரராவர். பல இந்திய சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் தெலுங்கு மக்களின் உரிமைக் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும் என்பதற்காக தனி ஆந்திர மாநிலத்தைப் பிரித்து அமைத்திட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினார். இக்கோரிக்கையை வலியுறுத்தி 1952 அக்டோபர் 19, அன்று சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கி, 82-வது நாளில் மரணம் தழுவிக் கொண்டது.
அமரர் பொட்டி ஶ்ரீராமுலு உண்ணாநிலை மேற்கொண்ட அவரது நண்பரான சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தை, ஆந்திர அரசு விலைக்கு வாங்கி, அதை அன்னாரது நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. அந்த இல்லத்தை நிர்மானிக்க, ஒரு நிர்வாக குழு ஏற்படுத்தி அதை பராமரித்து வருகிறது.
அமரர் பொட்டி ஶ்ரீராமுலு நினைவு கட்டிடத்தின் நிர்வாக குழுவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு சென்னை – மையிலை லஸ்-சில் நாளை அமரஜோதி பொட்டி ஶ்ரீராமுலு நினைவு கட்டிடத்தில் நடக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு ஆந்திரா – ஓங்கோலில் தேர்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிவாச ரெட்டி தலைமை விருந்தினராக பங்கு கொள்கிறார்.
மொழிவழி மாநிலத்திற்திற்கு வித்திட்ட, ஐயா பொட்டி ஶ்ரீராமுலு அவர்களை நாம் நினைவு கூறுவோம்.
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: