சென்னை எழும்பூரில் ரூ.1 கோடியில் ஆதித்தனார் சிலை வரும் டிசம்பர் மாதம் திறப்பு!

 சென்னை எழும்பூரில் ரூ.1 கோடியில் ஆதித்தனார் சிலை வரும் டிசம்பர் மாதம் திறப்பு!


சென்னை எழும்பூரில் ரூ.1 கோடியில் ஆதித்தனார் சிலை வரும் டிசம்பர் மாதம் திறப்பு!

எழும்பூர், பாந்தியன் சாலையில், ஆதித்தனார் சிலையை நிறுவுவதற்காக, 97.5 லட்சம் ரூபாய் செலவில், பீடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சந்திப்பில் நெரிசலை தடுக்க, மாநகராட்சி புதிய திட்டம் தயாரித்துள்ளது. சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலை, கமிஷனர் ஆபீஸ் சாலை, ஆதித்தனார் சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில், சி.பா.ஆதித்தனார் சிலை நிறுவப்பட்டிருந்தது. குறிப்பிட்ட இடத்தில், ஐந்து சாலை சந்திப்புகள் இருப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. அங்கு மேம்பாலம் அமைக்க, மாநகராட்சி எடுத்த முயற்சி கைவிடப்பட்ட நிலையில், சந்திப்பில் போக்குவரத்து மேம்பாட்டு பணிகளை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, மாநகராட்சி வல்லுனர் குழு ஆய்வு செய்து, பழைய ரவுண்டானாக்களை அகற்றிவிட்டு, அங்கு, ‘பீனட்’ வடிவிலான, ஒரே ரவுண்டானாவாக அமைக்கவும், அதில் ஆதித்தனார் சிலையை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வடிவமைப்பிலான ரவுண்டானாவிற்கு அளவீடு செய்யப்பட்டு, போக்குவரத்து இயக்கப்பட்டது. இதில், பாந்தியன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ஆதித்தனார் சாலையில் சென்று திரும்பி, மீண்டும் பாந்தியன் சாலைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டன. இதனால், இந்த வடிவமைப்பை மாற்ற, போக்குவரத்து காவல்துறையினர் பரிந்துரைத்தனர். இந்த பிரச்னை காரணமாக, ஆதித்தனார் சிலை நிறுவும் பணிகள் முடக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதற்கிடையே, வரும், 27ம் தேதி ஆதித்தனார் பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதால், அதற்குள் சிலையை நிறுவ, பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று, முதல்வர் பழனிசாமி, வரும், 20-ம் தேதிக்குள், ஆதித்தனார் சிலை நிறுவும் பணிகளை முடிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டிசம்பர் இறுதிக்குள், அந்த இடத்தில் போக்குவரத்து மேம்பாட்டு பணிகளை முடிக்கவும், முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, முதல் கட்டமாக, 97.5 லட்சம் ரூபாய் செலவில், ஆதித்தனார் சிலை நிறுவ வசதியாக, பீடம் அமைக்கும் பணியை மாநகராட்சி துவங்கியுள்ளது.

தற்போதைய வடிவமைப்பில், இரண்டு வட்ட வடிவிலான ரவுண்டானாக்கள் இடையில், ஒரு பெட்டக வடிவில், போக்குவரத்து தீவு அமையும். ஆதித்தனார் சாலையில் இருந்து வரும் போது, சந்திப்பின் முதல் ரவுண்டானாவில், ஆதித்தனார் சிலை நிறுவப்படும். இந்த வட்டம், 6 மீ., சுற்றளவில் இருக்கும். துரு பிடிக்காத குழாய் தடுப்பு அமைத்து, இந்த சுற்றளவில் கிரானைட் தரை அமைக்கப்படும். உள் பகுதியில், 7 அடி உயரத்திற்கு கான்கிரீட் பீடம் கட்டப்படும். இந்த பீடத்தில் கிரானைட் கற்கள், மின் விளக்குகள் அமைக்கப்படும். இந்த பணிகள் ஒரு வாரத்திற்குள் முடியும். அதன் பின், சிலையை சுற்றிலும், துரு பிடிக்காத குழாய் பொருத்துவது, பூங்கா அமைப்பு, நீரூற்று ஏற்படுத்துவது போன்ற அழகுபடுத்தும் பணிகள் செய்யப்படும். மற்றொரு வட்ட வடிவ ரவுண்டானாவில், பூங்கா போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். பெட்டக வடிவ போக்குவரத்து தீவில், பூங்கா போன்ற அமைப்பும், உயர் கோபுர மின்விளக்கும் அமைக்கப்படும். ஐ.ஆர்.சி., விதிமுறைப்படி, அனைத்து சாலை சந்திப்புகளிலும், வேகத்தடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், வாகனங்கள் வேகத்தை குறைக்காமல் செல்வதால், ‘டேபிள் டாப்’ அமைப்பில், கான்கிரீட் வேகத்தடை அமைக்கலாமா என்றும் யோசித்து வருகிறோம். இந்த பணிகள் அனைத்தும், முதல்வர் அறிவித்த படி, டிசம்பர் இறுதிக்குள் முடியும். இவ்வாறு மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: