தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட 9,000 புதிய சொற்கள்!

தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட 9,000 புதிய சொற்கள்!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் ‘தமிழ் அகராதியியல் நாள்’ தொடக்க விழாவாக சென்னை எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வெளியிட, பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: சொற்குவை திட்டத்தின் மூலம் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், அகராதி உருவாக்கம், புதிய கலைச் சொற்கள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட்டு, புதிய கலைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சொற்குவை திட்டம் முக்கிய பங்காற்றும். தற்போது 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தமிழ் வளர்ச்சியில் மிகப்பெரிய சாதனை.

தற்போது 9 ஆயிரம் புதிய தமிழ்சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை சொற்குவை இணையதளத்தில் சேமித்து வைக்கப்படும். அனைவரும் அந்த சொற்களை பயன்படுத்தலாம். மேலும்,உலகில் உள்ள 6,500 துறைகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: