மூன்றாம் கட்ட அகழாய்வை முடித்த கீழடியில், நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா?

 மூன்றாம் கட்ட அகழாய்வை முடித்த கீழடியில், நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா?

மூன்றாம் கட்ட அகழாய்வை முடித்த கீழடியில், நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா?

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்தும் மூன்றாம் கட்ட அகழாய்வு, இம்மாத இறுதியில் முடிவுக்கு வருகிறது. நான்காம் கட்ட அகழாய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நடக்குமா? என்பதும் கேள்விக் குறியாகி உள்ளது.

வைகை ஆற்றங்கரை பகுதிகளில் கிடைத்த பழங்கால பொருட்களின் அடிப்படையில், 293 இடங்களில் ஆய்வுகளை நடத்தும் மத்திய தொல்லியல் துறை, இறுதியாக கீழடி, மணலுார், கொந்தகை கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள பள்ளிச்சந்தை திடலை தேர்வு செய்தது. முதற்கட்ட அகழ்வாய்வை, 2014 – 15ல் 100 சதுர மீட்டரில் துவக்கியது. இதற்காக இங்கு, 2.88 மீ., ஆழம் வரை தோண்டப்பட்டது. எதிர்பார்த்ததை விட கூடுதலாக பொருட்கள் கிடைத்ததால், அடுத்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வு, 700 சதுர மீ., பரப்பில் நடந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இங்கு, 3.50 – 4.00 மீ., ஆழம் வரை தோண்டப்பட்டது. இந்த அகழாய்வு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 5,000-க்கும் மேற்பட்ட பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை ஓடுகள், சிதைந்த நிலையில் கட்டடங்கள், வடிகால்கள் ஆச்சரியம் தந்தன.

இங்கு சேகரிக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கரித்துகள்கள், அமெரிக்காவின், ‘பீட்டா’ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, இவற்றின் காலம், கி.மு., 200 என கணக்கிடப்பட்டது. ஆனால் வரலாற்று அறிஞர்கள் இதற்கும் முந்தைய காலத்தில் ஆதிமனிதன் இங்கு வாழ்திருக்க வேண்டும் என, உறுதி செய்கின்றனர். இப்படி இதன் ஆய்வுகள் உலக அளவில் பேசப்பட்டது. ‘இதனால், இந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என கோரிக்கைகள் எழுந்தன. அரசியல்வாதிகளும் தங்கள் பங்கிற்கு இங்கு வந்து பல கருத்துக்களை தெரிவித்தனர்.

அதுவரை அகழாய்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த அப்பகுதியினரிடையே, தங்கள் நிலங்கள் கைவிட்டு போய் விடுமோ என்ற அச்சம் எழுந்தது. இதனால், நிலங்களில் அகழாய்வுக்கு அனுமதி கொடுக்க முன்வரவில்லை. மூன்றாம் கட்ட அகழாய்வு இழுபறியாக துவங்கியது. ஒருவர் மட்டும், 55 சென்ட் இடத்தில் அனுமதி அளித்துள்ளார். அதில் குறைந்த எண்ணிக்கையில் குழிகள் தோண்டப்பட்டு, ஆறு மாதங்களாக நடந்து வந்த இந்த அகழாய்வு இறுதி கட்டடத்தை எட்டி உள்ளது.

இத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே பல்வேறு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட அழுத்தங்களால் இந்த அகழாய்வில் எந்த விதமான பொருட்கள் கிடைத்தன, அகழாய்வின் நிலை என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ‘செப்., 30க்குள் அகழாய்வை முடிக்க வேண்டும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிகளை தொடர்வது, ஆவணப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால் அக்டோபர் முதல் வாரம் வரை பணிகள் நடக்கவும் வாய்ப்பு உண்டு. ‘எந்த நிலையில் நிலத்தை வாங்கினோமோ அதே நிலையில் நிலத்தை ஒப்படைத்துவிடுவோம். நான்காம் கட்ட ஆய்விற்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது’ என்கின்றனர் அதிகாரிகள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: