26 டி.எம்.சி., காவிரி நீர்: கர்நாடகா இழுத்தடிப்பு

தமிழகத்திற்கு 26.3 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளதால், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

latest tamil news
 

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், முறைப்படி நீரை வழங்காமல் கர்நாடகாஇழுத்தடிக்க துவங்கி உள்ளது.ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.,க்கு பதிலாக 7.69 டி.எம்.சி.,யும், ஜூலையில் 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக 27.9 டி.எம்.சி.,யும் வழங்கப்பட்டது. ஆக., மாதம் 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக 22.6 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 36.7 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதுவரை 11.5 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, ஜூன் முதல் 69.8 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கியுள்ளது. 8ம் தேதி நிலவரப்படி, கர்நாடகா வழங்க வேண்டிய நீரின் நிலுவை 26.3 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், விரைவில் சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கவுள்ளது. சேலம், மேட்டூர் அணையில் நீர் இருப்பு 38.1 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. இதனால், சம்பா சாகுபடி பாசனத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

நன்றி :தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>