ஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு மலை பகுதியில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காடு மலையின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவை குறித்து, அறிவியல் எழுத்தாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர், ஏற்காடு மலைப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலுார் கிராமத்தில், தோட்டத் தொழிலாளி குப்பன், 35, என்பவரது தோட்டத்தில், முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட குழிகளை கண்டுபிடித்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அறிவியல் எழுத்தாளர் இளங்கோ கூறியதாவது:

இறந்தவர்களை மண் பானையில் வைத்து புதைக்கும் பழக்கம், கி.மு., 2 முதல், கி.பி., 4ம் ஆண்டு வரையிலான காலத்தில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை வைத்து, அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து மூடி, ஆழமான குழியில் புதைத்து வந்தனர். இந்த குழிக்கு, ’மாண்டவர் குழி’ என கூறப்பட்டாலும், மாண்டவர் குழியை பாண்டவர் குழி, பாண்டியன் குழி, குள்ளர் குழி என்று அழைத்தனர். இப்பகுதியில், மாண்டவர் குழி இருப்பதால், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>