கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை!

கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை!

கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை!

நாவக்குறிச்சி பெருமாள் கோவில் கட்டுமான பணியின் போது, நிலவரை சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஒன்பது ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்யும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு, தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, நாவக்குறிச்சி கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத நயினபூர்ண நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆஞ்ச நேயர் சிலை அமைக்க பள்ளம் தோண்டினர். அப்போது, நிலவரை சுரங்கத்தினுள், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, விஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் மற்றும் திருமங்கை மன்னர் ஆழ்வார் என, மொத்தம், ஒன்பது ஐம்பொன் உலோக சிலைகள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன.

நாவக்குறிச்சி நாராயண பெருமாள் கோவில் வளாக நிலவரை சுரங்கத்தில், மொத்தம், 144.25 கிலோ எடை கொண்ட ஒன்பது உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழங்கால சிலைகள் என்பதால் அவற்றை ஆய்வு செய்து சிலைகள் பயன்படுத்திய ஆண்டு அதன் விபரங்கள்
மற்றும் அதன் மதிப்பை அறிக்கையாக வழங்கும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

ஓரிரு நாளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவர். ஆய்வுக்கு பின் யார் வசம் சிலைகளை ஒப்படைப்பது என்று மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார். இவ்வாறு ஆத்துார் தாசில்தார் கேசவன் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: