திருவாரூர், மன்னார்குடி அருகே, கோவில் திருப்பணியின் போது, ஐம்பொன் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சேதமடைந்ததால், 10 ஆண்டுகளாக வழிபாடுகள் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், அறநிலையத் துறை நிதியுதவியுடன், இக்கோவில் திருப்பணியை, கிராம மக்கள் துவக்கி உள்ளனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நேற்று முன்தினம் (30.6.2017) இரவு, 7:00 மணிக்கு, மீனாட்சி அம்மன் கர்ப்பகிரகத்தில் பணி நடந்தது. அம்மனுக்கு எதிரே உள்ள சுவரை பழுது பார்க்கும் போது, சத்தம் கேட்டுள்ளது. சுவரை தோண்டி பார்த்த போது, சுவாமி சிலை இருப்பது தெரிய வந்தது. உடனடியாக, அறங்காவல் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின், சிலையை, அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இச்சிலை, 1.5 அடி உயரமுடைய ஐம்பொன்னால் ஆன, சந்திரசேகர சுவாமி சிலை என, உறுதி செய்யப்பட்டது. பின், சுவாமி சிலை, அக்கிராமத்தில் உள்ள, பெருமாள் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.