தமிழக பாரம்பரியத்தின் அடையாளங்களான கல்வெட்டுகளை பாதுகாக்காத இளைய தலைமுறை!

தமிழக பாரம்பரியத்தின் அடையாளங்களான கல்வெட்டுகளை பாதுகாக்காத இளைய தலைமுறை!

தமிழக பாரம்பரியத்தின் அடையாளங்களான கல்வெட்டுகளை பாதுகாக்காத இளைய தலைமுறை!

கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவற்றை, இளம் தலைமுறையினர் அழித்து வருவதாக குற்றச்சாட்டுகளையடுத்தது தொல்லியல் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழகத்தில், இதுவரை, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவை, கோவில்களில் உள்ளன.

அவற்றை, காதலர்கள், நண்பர்கள் என்ற போர்வையில், தங்களின் பெயர்களை கிறுக்குவது, பெயின்டால் எழுதுவது, எழுத்துக்களை சிதைப்பது உள்ளிட்ட அநாகரிக செயல்களில், இளம் தலைமுறையினர் ஈடுபடுவதாக கல்வெட்டு அறிஞர்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார, கல்வெட்டியல் கண்காணிப்பாளர் கூறியதாவது: நமக்கு பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது என்பதையும், 2,000 ஆண்டுகளுக்கு மேலாக, நாம் எழுதத் தெரிந்த இனம் என்பதை அறிவிக்கும் வரலாற்று சான்றுகளாக இருப்பவை, கல்வெட்டுகள் தான்.

இதை அறியாத இளம் தலைமுறையினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும், கல்வெட்டுக்களை அழிக்கின்றனர்.

தற்கால எழுத்துக்கள் போல் இல்லாமல், படிக்க முடியாத வகையில் உள்ள எழுத்துக்களை, வீண் எனக்கருதி, அவற்றின் மீது, கிறுக்கவோ, சுண்ணாம்பு, வண்ணங்களை பூசவோ கூடாது.

திருப்பணியின் போது, இயந்திரம், ஆயுதங்களால் அவற்றை பெயர்க்கவோ, உடைக்கவோ கூடாது.பாதுகாப்பற்ற முறையில், வயல்வெளிகள், நீர்நிலைகள், கரைகள், மைதானங்கள், காடுகளில் கிடக்கும் குறியீடுகள், எழுத்துக்கள் உள்ள, பாறை துண்டுகளை சிதைக்க கூடாது.

அது குறித்த தகவலை, இந்திய தொல்லியல் துறையின், சென்னை அலுவலகத்திற்கு, 044 – 2567 5783, 98867 69865 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>