Video – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி!

உலகத் தமிழர் இணைய பாலம் அன்மையில் நடத்திய Zoom செயலி நேரலை கலந்துரையாடலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் மீதே தமக்கு ராஜீவ் படுகொலையில் சந்தேகம் உள்ளதாக அதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திருச்சி வேலுச்சாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அத்தோடு அன்று மத்திய அமைச்சராக இருந்த சுப்ரமணியசாமியும் இந்த படுகொலையில் எவ்வாறு ஈடுபட்டிருப்பார் என்பதையும் பலவித ஆதாரங்களை கொண்டு அடுக்கினார் திருச்சி வேலுச்சாமி.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்டவர்களின் வேள்விகளுக்கு சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த கலந்ததுரையாடலில் பல்வேறு விடைகான வினாக்களுக்கு மனம் திறந்து விடையளித்தார் திருச்சி வேலுச்சாமி.

ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் அன்று இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் தூரோக திட்டமிடலுக்கு துணை போன குற்றச்சாட்டிற்கு அதே வேலுச்சாமி பதிலளிக்க தினறியது கண்கூடாக தெரிந்தது.

விரிவாக தெரிந்தது கொள்ள இனி நாம் அந்த கலந்துரையாடலைப் பார்ப்போம்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>