மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது மகன் வழி வாரிசுமான திரு .ஐயப்பனிடம் கேட்கையில் பல புகழ் மிக்க தருணங்கள் நிறைந்த வாழ்கை வரலாற்றை நம்மிடம் எடுத்துரைத்தார். அதனையும், மற்ற ஊடகங்கள் அவரை பற்றியும், அவரின் இந்திய விடுதலை போராட்டம் பற்றியும் எழுதியதை இப்பதிவில் காணலாம். 

வரலாறு

துப்பாக்கிகவுண்டர் என்கின்ற உதயப்பெருமாள்கவுண்டர், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்னக்குலம் கிராமத்தில் வேளாள கவுண்டர் குடும்பத்தில் சாத்தந்தை கோத்திரத்தில் கி.பி.17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர். 15 ஆண்டுகள் ஆங்கிலேயப் படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுதல், தோட்டாக்கள் தயாரித்தல், வெடிகுண்டு தயாரித்தல் ஆகியவற்றில் பயிற்சி பெற்று மிகச்சிறப்பாக செயல்பட்டதால் துப்பாக்கி கவுண்டர் என்றும் அழைக்கப்பட்டார். மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்டப் படையில் துப்பாக்கிப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றினார்.

பணிகள்

  • பெரியமருது சிவகங்கை சீமை படையில் துப்பாக்கிப்படை பிரிவை ஏற்படுத்தி இவரை படைத்தளபதியாக நியமித்தார்.
  • 1801 ஆம் ஆண்டு ஜூன் 7 -ல் மேஜர் கிரே தலைமையில் பிரிட்டிஷ் படை வருவதை அறிந்த இவர், கொல்லாரிப் போர் முறையில் தாக்குதல் நடத்தி மேஜர் கிரேயை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
  • திருப்பாச்சேத்தி ஊரின் அம்பலக்காரராக மருதிருவரால் நியமிக்கப்பட்டார்.
  • திருப்பாச்சேத்தி ஊரில் வெட்டரிவாள் அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மறைவு

1801-ல் அக்டோபர் 1 -இல் காளையார் கோவிலில் வெள்ளையருக்கும் சிவகங்கை சீமை படைக்கும் நடந்த போரில் தனது மார்பில் பீரங்கி குண்டுகளைத் தாங்கி இவர் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் அக்டோபர் 5ஆம் நாள் தகனம் செய்யப்பட்டதால் அந்நாளே அவரது நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது .

வாரிசுகள்

இவரின் வாரிசுகள் தற்பொழுதும் திருப்பாச்சேத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களே இவ்வூரின் அம்பலக்காரகளாக இருந்து வருகின்றனர். துப்பாக்கி கவுண்டர் இறப்பிற்கு பின்னர் அவரின் மனைவி தனது வாரிசுகளுக்கு பிள்ளை பட்டம் சூட்டி சைவ வேளாளர் பிரிவில் திருமணம் செய்து வைத்தார். தற்பொழுதும் இவரின் வாரிசுகள் கவுண்டபுரத்தார் என ஊர்மக்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாழும் பகுதி கவுண்டவளவு என்று அழைக்கப்படுகிறது.

சிலை

இவரது சிலையை காளையார் கோவில் முன்னாள் மருது சகோதரர்கள் நிறுவியுள்ளனர். இவரின் சிலைக்கு பூசையும் நடைபெறுகிறது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: