ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுவாமி சிலைகள் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் பதுக்கல்!

statue-trafficking-in-singaporeதமிழகத்தில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தப்பட்டு, அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட, பல நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை, 2011 அக்டோபர், 30ல், ஜெர்மனியில் பதுங்கி இருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரன், சுபாஷ் சந்திரகபூரை, 86, கைது செய்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவன், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சாமி சிலைகளை திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்று, கோடிகளில் புரண்டது விசாரணையில் தெரியவந்தது. கபூரின் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த, சென்னையைச் சேர்ந்த தீனதயாள்; மகாபலிபுரம் – லட்சுமி நரசிம்மன், சீத்தாராமையா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களில், சீத்தாராமையா இறந்து விட்டான். மற்றவர்களை, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., – பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். விசாரணையில், கபூரும், அவனது கூட்டாளிகளும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, சுவாமி சிலைகளை திருடி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி விற்றிருப்பது தெரியவந்து உள்ளது.

கடந்த, 2002ல், விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட பிரத்தியங்கரா தேவி சிலை உட்பட, இரு சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சிலைகளை மீட்க, காவல்துறை முற்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., – பொன்.மாணிக்க வேல் கூறியதாவது:

தமிழக சாமி சிலைகள், மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, கடல் மார்க்கமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. சுங்கத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவி இல்லாமல், இது சாத்தியம் இல்லை. மேலும், சிலை மீட்பு முயற்சி என்பது ஒரு தவம்.
சிலைகள் நம் சொத்து என்பதை, வெளிநாட்டு அரசுகளுக்கு தகுந்த வரலாற்று சான்றுகள் மற்றும் எழுத்து மூலமாக நிரூபிக்க வேண்டி உள்ளது. சவால்கள் நிறைந்த பணி என்றாலும், சிலைகளை மீட்பதில் அசரப்போவது இல்லை. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: