வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளின் புத்தகங்களில் மாற்றப்பட்ட தமிழர் வரலாறு; சீமான் கண்டனம்

 ‘வெளிநாடுகளில் வெளியிடப்பட்டிருக்கும், தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாட புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது, கடும் கண்டனத்துக்குரியது’ என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

latest tamil newsஅவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை என்ற அமைப்பால், தமிழ் குழந்தைகளுக்காக, தமிழ்பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அப்புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.


ஈழத்தின் பூர்வகுடிகள் தமிழர்கள் இல்லை; தமிழ் மன்னர்கள் சிங்கள மக்களை துன்புறுத்தினர்; தமிழர்கள் போராடியதால் தான் கொல்லப்பட்டனர் என, கற்பனையில் பொய்களை, தமிழர் இன வரலாறாக மாற்ற முனையும் வன்மச் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.ஈழ தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில், அவர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதுாறுப் பிரசாரத்தை தடுத்து முறிடியக்க வேண்டும். தமிழர்களின் மெய்யான வரலாற்றை நிலை நிறுத்த, உலகத் தமிழர்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: