அடுத்த தலைமுறை செழித்து வாழத் திருச்சி ஆட்சியர் சிவராசு செய்த சூப்பர் பணி!

குளக்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு வைத்து பாரம்பரியத்தை மீட்போம் என நாளைய தலைமுறை பயன்பெறத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அருமையான தொடக்கத்தை வைத்துள்ளார்.

 
பனைமரத்தைப் பாதுகாக்கும் விதமாகத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்டுவது தடை செய்யப்படும் எனவும் 3 கோடியில் பணி மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு வேலன் பட்ஜெட்டில் அறிவித்தது.
 
இந்நிலையில் பனைமரத்தின் அவசியங்களும், அதில் உள்ள பயன்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, பல்வேறு தகவல்கள் சமூகவலைதளத்தில் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் குறிப்பாக சமூக ஆர்வலர்கள் பலர் தற்போது பனைமர விதைகளை நட ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாகத் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள பெரிய குளத்தில் (Shine Trichy) என்ற தனியார் அமைப்பு சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

“பனை விதைப்போம் பாரம்பரியம் காப்போம்” என்ற விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி உள்ள தனியார் அமைப்பு, இதன் முதற்கட்ட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திருச்சி
மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்திருந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்து கொண்டு பனை விதைகளைக் குளக்கரை பகுதிகளில் நட்டு வைத்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக மணிகண்டம் யூனியன் ஆஃபீஸ் பகுதி உள்ள பெரியகுளத்தில் ஆயிரம் விதைகள் நடப்பட்டு, அதன் பின்னர் இந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பனைகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி:சமயம் தமிழ்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: