அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை, காந்தி மண்டபத்தில் கட்ட பொம்மனுக்கு சிலை : தமிழக அரசின் அறிவிப்புகள்

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை இன்று காலை கூடியதும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் இதோ

*தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்.அதன்படி,

*அண்ணா பல்கலைக்கழகத்தில் றைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலை அமைக்கப்படும்.

*கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் .

*ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்

*சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சிலை அமைக்கப்படும்.

*காந்தி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

*தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும்

*சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும் நாமக்கல் நகரில் அரங்கம் அமைக்கப்படும்

*கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.


*இந்தி திணிப்பை எதிர்த்து முதலில் உயிர் தியாகம் செய்த மொழிப்போர் கீழபழுவூர் சின்னசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

*திராவிட இயக்கத் தளகர்த்தர்களில் முன்னோடியாகவும், தலைசிறந்த இலக்கியவாதியும், முன்னாள் நிதி அமைச்சருமான, நடமாடும் பல்கலைக்கழகம் மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்குச் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.

*பெண் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், தேவதாசி ஒழிப்பு இயக்க மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் முன்னோடி பெண் சமூகச் சீர்திருத்தவாதி  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு மயிலாடுதுறையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.

*இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்,  இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்,   தமிழ்நாட்டின்  சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்குப் புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.

*மேற்சொன்ன தலைவர்களுக்குத் திருவுருவச் சிலைகள் நிறுவ   ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*இந்தியத் திருநாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களிள்
சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களுக்குத்  திருப்பூர் மாவட்டத்தில் திருவுருவச்சிலையும்  அரங்கமும் அமைக்கப்படும்.

*பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் “சி.சுப்பிரமணியம் வளாகம்”  என்று பெயர் சூட்டப்படும்.

*முன்னாள் அமைச்சரும், ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றி மறைந்த தலைவர்  திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில்  திருவுருவச் சிலையுடன்  அரங்கம் அமைக்கப்படும்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: