ஓபிசி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்; அரசிதழில் வெளியீடு

ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

ஓ.பி.சி., பிரிவுகளுக்கான ஜாதிகள் எவை என்பதை இனம் கண்டு, பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கே வழங்கும், மிக முக்கிய அரசியல் சட்டத்திருத்த மசோதாவை, நடந்து முடிந்த பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில், மத்திய அரசு தாக்கல் செய்தது. விவாதத்துக்கு பின், இந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனையடுத்து 127வது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

நன்றி: தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: