ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

 
பாஜ, முருகன், மபி, மத்திய அமைச்சர், எல்.முருகன், மத்திய பிரதேசம்
facebook sharing button
whatsapp sharing button
மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார்.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது.

இந்நிலையில், ம.பி.,யில் காலியாக இருக்கும் ராஜ்யசபா இடத்திற்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. அதில், ம.பி.,யில் இருந்து முருகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
அதேபோல், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவல், அசாமில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ம.பி., மற்றும் அசாமில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், இரு அமைச்சர்களும் எளிதாக வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்படுகிறது.
 
நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: