‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி எம்டன் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய நாளான இன்று நினைவு அஞ்சலி செலுத்த வாரீர்!!!

இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு தமிழ் சிங்கம் மட்டும் சீற்றம் குறையாமல் சீறிப்பாய்ந்து… ஆம்! எம்டன் போர் கப்பல் மூலம் 22.09.1914 அன்று சென்னை நீதிமன்ற வளாகத்தின் அருகில் பீரங்கி தாக்குதல் நடத்தினார் தளபதி ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை. ஆங்கிலேய அரசாங்கமே அதிர்ந்தது . பிறகு இந்த சம்பவத்தை கல்வெட்டாகவும் வடிந்து வைத்தது அதே ஆங்கிலேய அரசாங்கம். சுகந்திரத்திற்கு பின்னாட்களில் அதே கல்வெட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகதில் வைக்கப்பட்டது.

இன்று அந்த சம்பவத்தினுடைய 107 ஆவது நினைவு நாள் என்பதால் அந்த நினைவிடத்திற்கு உலக தமிழர் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்த அழைக்கிறார் திரு. அக்னி சுப்பிரமணியம் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நம் செண்பகராமன் பிள்ளை ஐயா அவர்களின் போராட்ட குணத்தை நெஞ்சில் நினைத்து போற்றுவோம்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: