தமிழ் பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் தமிழர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் தனது 78 ஆவது அகவையில் உடநலக் குறைவால் காலமானார்.

“போராட்டம் போராட்டம் என் ஆசைத் தாய் மண்ணில்”, ‘வீழமாட்டோம்’, “விடைகொடு எங்கள் நாடே” போன்ற உணர்வூட்டும் சிறப்பான பாடல்கள் மூலம் அழியாப் புகழோடும் எழுச்சி உண்ர்வுகளுள்ளும் பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்!

அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாடல். ‘கன்னத்தில் முத்தமிட்டால் ‘ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்:

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: