தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி!

தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி!

தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதால், ஜனவரி முதல் பணிகளை துவங்க, திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கீழடி பள்ளிச்சந்தை பகுதியில் உள்ள, 110 ஏக்கர் தென்னந்தோப்பில் தொல்லியல் சின்னங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், 2015ல் மத்திய தொல்லியல் துறை இங்கு அகழாய்வு நடத்தும் பணியை துவங்கியது. முதல் இரண்டு கட்ட பணிகள் முடிவிற்கு வரும் போது, இங்கு கிடைத்த பொருட்களை எங்கும் கொண்டு செல்லக்கூடாது, அகழாய்வு இடத்தை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து வலியுறுத்தப்பட்டன. இதனால், மூன்றாம் கட்ட அகழாய்வு நடப்பதில் சிக்கல் நீடித்து, கடந்த மாதத்துடன் அகழாய்வு முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நான்காம் கட்ட அகழாய்விற்கும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இங்கு போராட்டம், வழக்கு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை வெளிப்படையாக ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன், மாநில அரசே அகழாய்வு பணிகளை மேற்கொள்ளும் என, கடந்த மாதம் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் கோட்டைமேடு பகுதியில், எட்டு ஆண்டுகளாக, மாநில அரசு நடத்தி வந்த அழகாய்வு முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம், பட்டறைபெரும்புதுாரில் அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறை, சில மாதங்களுக்கு முன்னரே மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரியிருந்தது.

அதன் பின், மிகவும் குறுகிய காலத்தில் கீழடி அகழாய்வுக்கும் அனுமதி கோரப்பட்டது. இதில் மத்திய தொல்லியல் துறை, கீழடி அகழாய்விற்கு உடனடியாக அனுமதி வழங்கியுள்ளது. இதனால், பட்டறை பெரும்புதுார் அகழாய்வு இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இல்லை. மாநிலத்தில் ஒரு இடத்தில் மட்டுமே அழகாய்வு நடத்த அனுமதி அளிக்கப்படும். வழக்கமாக மாநில அரசு நடத்தும் இந்த அகழாய்விற்கு, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யும். இந்த தொகை உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டால், ஜன., முதல் வாரத்திலேயே பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: