‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி கோ.சுவாமிநாதன், காலமான தினம் இன்று!


இதே நாளில் அன்று

அரியலுார் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் 1946ல் பிறந்தவர் கோ.சுவாமிநாதன். வேளாண்மை பட்டதாரியான இவர், அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையை துவங்கினார். பின், 1977 முதல் 1984 வரை நெல்லை வானொலியில் அறிவிப்பாளராக மாறினார். இதை தொடர்ந்து, சென்னை வானொலி நிலையத்தில் சேர்ந்து, ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி வழியாக, பரவலாக அறியப்பட்டார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக பணியாற்றினார். ‘வீடும் வயலும்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தனியார் ‘டிவி’யில், ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சி நடத்தினார். இவரின், ‘இன்று ஒரு தகவல்’ நுால், 23 பாகங்களாக வெளிவந்துள்ளது. ‘கடவுளைத் தேடாதீர்கள், சிந்தனை விருந்து, நினைத்தால் நிம்மதி’ உட்பட பல நுால்கள் எழுதியுள்ளார்; ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். 2009 செப்., 16ம் தேதி தன் 63வது வயதில் காற்றில் கலந்தார்.தென்கச்சி கோ.சுவாமிநாதன், காலமான தினம் இன்று!

நன்றி :தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: