இந்தி தேசிய மொழி இல்லை!!! எதிர்பாளர்களை மீண்டும் ஓங்கி கொட்டிய தமிழ்நாடு!!! Zomato தமிழில் பகிரங்க மன்னிப்பு அறிக்கை!!!

எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம் என ZOMATO நிறுவனம் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசத்தின் மாறுபட்ட கலாசாரம் மீது எதிர்கருத்தை ஊழியர் காட்டியுள்ளார். வாடிக்கையாளரிடம் எதிர்கருத்தை காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக ZOMATO விளக்கமளித்துள்ளது.

உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் (Zomato) தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரில் பிரச்சினை ஏற்பட்டதும் வாடிக்கையாளர் சேவை முகவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சேவை முகவரோ, “இந்தி நம் தேசிய மொழி. நம் தேசிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொள்வது நல்லது” என்று கூறியுள்ளார்.

இதை சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்தார் விகாஷ். தமிழகத்தில் தொழில் செய்யும் சொமாட்டோ நிறுவனம் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், இந்தி நம் நாட்டின் தேசிய மொழி இல்லை எனவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.

மேலும், சொமாட்டோ நிறுவனத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி #Reject_Zomato என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து சொமாட்டோ நிறுவனம் விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.


இதுகுறித்து சொமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம்.

பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை.

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளுர்மயமாக்கியுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால் செண்ட்டர் / சர்வீஸ் செண்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோஒம்” என்று தெரிவித்துள்ளது.

Subscribe to Comments RSS Feed in this post

1 Responses

  1. Pingback: சு மு பாண்டியன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: