விஐடி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர் ஐயா கோ.விஸ்வநாதன் பிறந்த நாளில் ஐயா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்

கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின்  ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான கொத்தக்குப்பத்தில் பிறந்தார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1980 ஆம் ஆண்டில் அணைக்கட்டு. தொகுதியிலிருந்தும், 1991 தேர்தலில் ஆற்காடு தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று, தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளமைப் பருவம்

கோ.விஸ்வநாதன், கோவிந்தசாமி – தம்பதியருக்கு ஆறாவது குழந்தையாக பிறந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் உள்ள குக்கிராமமான கொத்தக் குப்பத்தில் முறையான கல்வியளிக்கும் பள்ளிக்கூடம் எதுவும் அப்போது இல்லை. இதனால் அனைத்து குழந்தைகளும் கூடும் இடமான நடேச முதலியார் என்பவரது வீட்டில் இவருடைய பள்ளிப் படிப்பு தொடங்கியது. இவருடைய முதல் ஆசிரியரான பட்டு ரங்கநாதன், இவருடைய ஆர்வமிகுதியையும் பேச்சுத்திறன்களையும் அடையாளம் கண்டார். பட்டு ரங்கநாதன், மாணவர் மன்றம் ஒன்றைத் தொடங்கி மன்றத்தின் மூலமாகப் பேச்சுப் போட்டிகளை நடத்தினார். விஸ்வநாதன் ஆவலுடன் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தினார். தனது ஆசிரியரிடமிருந்து புத்தகங்களை கடன் வாங்கி ஓய்வு நேரங்களில் அவற்றை வாசித்து அறிவைப் பெருக்கிக் கொண்டார். ஒர் உயர்நிலைப் பள்ளி மாணவராக விஸ்வநாதன் சகலகலா வல்லவராக விளங்கினார். குறிப்பாக படிப்பு மற்றும் விளையாட்டுகளில் தனித்துவம் பெற்று சிறந்து விளங்கினார்.

கல்வி

விஸ்வநாதன், சிறுவயது முதலே சிறந்த கல்வியாளராக விளங்கினார். சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் கல்வி கற்று பொருளியல் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் நிறைவு செய்த இவர் 2003 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேம்பட்ட மேலாண்மை திட்டப் படிப்பையும் நிறைவுச் செய்தார். இவரது தலைமைத் திறன்களைக் கண்ட முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரை 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட ஒரு போட்டியாளராக இவரைத் தேர்ந்தெடுத்தார். இவரும் போட்டியிட்ட தனது தொகுதியில் வெற்றி பெற்று சுமார் 500,000 வாக்குகள் பெற்று, மக்களின் பிரதிநிதியாக இந்திய பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொறுப்புகள்

தற்போது, டாக்டர் விஸ்வநாதன் பின்வரும் அலுவலகங்களில் பொறுப்பு வகிக்கிறார்.

  • வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வேலூர்
  • வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை
  • தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வட ஆற்காடு கல்வி மற்றும் அறக்கட்டளை, வேலூர்
  • தலைவர், அமெரிக்க நண்பர்கள் அமைப்பு, சென்னை
  • செயல் தலைவர் நூற்றாண்டு விழா அறக்கட்டளை, சென்னை
  • துணை தலைவர் திரு.வி.க மற்றும் டாக்டர் மு.வ கல்வி அறக்கட்டளை, சென்னை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>