திறமைகளின் களஞ்சியமாய் திறம்பட செயல்படும் சென்னை மாணவி!

‘கண்ணாடி பந்துக்குள்ளே நீ மட்டுமே இருக்குற தனி உலகத்தை கற்பனையில உருவாக்கு; உன் இலக்கை குறி வை; கவனம் சிதறாது!’ – என் பயிற்சியாளர் சொன்ன இந்த மந்திரம்தான் படிப்பிற்கும், விளையாட்டிற்கும் எனக்கான விளக்கு!

யார் இவர்
பெயர்: ஆர்.பி.நேத்ரா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை
வகுப்பு: 9ம் வகுப்பு
பள்ளி: பவன்ஸ் ராஜாஜி, சென்னை.

என் பாதை
‘படிப்பு ஒரு பக்கம்; நீச்சல், யோகா, வயலின், குக்கிங், பேக்கிங் மறுபக்கம்; இப்படியான தேடல்ல நான் கண்டுபிடிச்ச விளையாட்டுதான்… துப்பாக்கி சுடுதல்!

நேத்ரா வைக்கிற குறி…?
பெரும்பாலும் தப்பினதில்லை! பள்ளி அளவிலான போட்டிகள்ல பதக்கங்கள்; சமீபத்திய ‘மாநில சாம்பியன்ஷிப்’ போட்டியில 25 மீட்டர் ‘ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் – ஐூனியர் வுமன் பிரிவு’ல வெண்கலம், ’10 மீட்டர் ஏர் பிஸ்டல்’ பிரிவுல தங்கம் ஜெயிச்சிருக்கேன். டில்லி தேசிய போட்டிக்கு தயாராயிட்டு இருக்குறேன்!

மாற்றம் வரணும்
‘பெண் மாதிரி ஆண் அழக்கூடாது!’ங்கிற அறிவுரையும், ‘ஆண்கள் விளையாட்டு பெண்ணுக்கு எதுக்கு?’ங்கிற சிந்தனையும் அழியணும்.

எங்கள் நேத்ரா
‘மன வலிமைக்கு… படிப்பு; உடல் வலிமைக்கு… விளையாட்டுன்னு தெளிவா இயங்குறவ எங்க நேத்ரா!’
– கி.சுமலதா, ஆசிரியை.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: