முத்தமிழ் மையம் சார்பில் விருது வழங்கும் விழா

காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு முத்தமிழ் மையத்தின் இயக்குனர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். இந்திய வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆறுமுகம், கல்வியாளர் சங்கமத்தின் நிறுவனர் சிகரம் சதீஷ் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: