புதுக்கோட்டை அருகே ஆற்றில் மணல் அள்ளும் போது, 300 ஆண்டு பழமையான சுவர் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை அருகே ஆற்றில் மணல் அள்ளும் போது, 300 ஆண்டு பழமையான சுவர் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை அருகே ஆற்றில் மணல் அள்ளும் போது, 300 ஆண்டு பழமையான சுவர் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை அருகே, ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய போது, 300 ஆண்டுக்கு முந்தைய, பழமையான சுவர் கண்டு பிடிக்கப்பட்டது. அது, இறந்தவர்களை அடக்கம் செய்த, பள்ளிப்படை கோவிலாக இருக்கும் என, வரலாற்று அறிஞர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, அய்யங்காடு பகுதியில், அக்னியாறு உள்ளது. இது, திருச்சி அருகே துவங்கி, மாவட்டத்தின் எல்லைப் பகுதியான, காட்டாத்தியை கடந்து, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே, கடலில் கலக்கிறது. சில ஆண்டாக பருவமழை பொய்த்ததால், இந்த ஆறும், வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களாக, அக்னியாற்றில் சட்ட விரோதமாக, மணல் அள்ளப்படுகிறது. ஜே.சி.பி., மூலம், அக்னியாற்றில், 10 அடி ஆழம் வரை தோண்டிய போது, 300 ஆண்டுக்கு முந்தைய, பழமை வாய்ந்த சுவர் ஒன்று தென்பட்டுள்ளது. அந்த சுவற்றை, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு சிதைத்து விட்டு, மணல் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர், மங்கனுார் மணிகண்டன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது :

அக்னியாற்றில் தோண்டப்பட்ட இடத்தில் இருப்பது, சுற்றுச் சுவரின் அடித்தளம் என்பதை அனுமானிக்க முடிகிறது. தற்போது, வெளியே தெரியும் கட்டுமானம், 70 அடி நீளத்துடன் உள்ளது. இந்த கட்டுமான பகுதிக்கு உட்புறத்தில், தனித்தனி கட்டட அமைப்புகளை காண முடிகிறது. மேலும், செம்புறாங் கற்களைக் கொண்ட அடிமானமும், அதன் மேற்பகுதியில் செங்கற் கட்டுமானமும் இருந்துள்ளதை, மேலடுக்கில் கிடைத்துள்ள செங்கற்கள் மூலம் அனுமானிக்க முடிகிறது. இதன் காலத்தை கணிக்கும் வகையில் எந்த உறுதியான சான்றுகளும் கிடைக்காவிட்டாலும், அடிக்கட்டுமான அமைப்பு, செங்கல் வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானமாக இருக்கலாம் என, கருதலாம். அதுமட்டுமின்றி, இங்கு லிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அதை யாரோ கொண்டு சென்று விட்டதாகவும், இப்பகுதியினர் கூறினர். இதன் அடிப்படையில், இது ஒரு நீத்தார் சமாதி மீது எழுப்பப்பட்ட பளளிப்படை கோவலாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக, கருதலாம். இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இவ்வமைப்பு கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு மிக அருகில், ஆற்றின் உட்பகுதியில் கல்லறைகள் காணப்படுகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: