உலக பாரம்பரிய தினம் இன்று: தமிழக தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுமா?

 உலக பாரம்பரிய தினம் இன்று :தமிழக தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுமா?

உலக பாரம்பரிய தினம் இன்று :தமிழக தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுமா?

இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படும் நிலையில், அழிந்து வரும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தொல்லியல் அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலக பாரம்பரிய தினம், ஆண்டுதோறும், ஏப்., 18ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய நாட்டிலும், நமது தமிழகத்திலும் உள்ள பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், பாரம்பரிய சான்றுகளை பாதுகாக்க, தொல்லியல் துறை அக்கறை காட்டவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நம் நாட்டில், அழியக்கூடிய மண் மற்றும் மரத்தால் அரண்மனைகளை கட்டிய மன்னர்கள், இறைவனுக்கு மட்டும், நிலையான கல்லால் கோவில்கள் அமைத்தனர். தற்போது, கோவில்கள் தான் வரலாற்று சான்றுகளாக உள்ளன. சமீபத்தில் கள ஆய்வு செய்த போது, இரண்டு கோவில்களில், முக்கிய சான்றுகள் அழியும் நிலையில் உள்ளதை காண முடிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆனுார் வேதநாராயணர் கோவிலில், பல்லவர், சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன; வரலாற்று சான்றுகளும் உள்ளன. மரங்கள் வளர்ந்து, கோவில் சின்னங்கள், கல்வெட்டுகள் எல்லாம் சிதைந்து வருகின்றன; கல்வெட்டுகளும் திருடு போயுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், சித்தாத்துாரில், பெருங்கருணை ஈஸ்வரர் கோவில் உள்ளது. கருவறையில், 16 பட்டை வடிவில், பல்லவர் கால லிங்கம் உள்ளது. கருவறையின் தெற்கு சுவரில், விஜயநகர கல்வெட்டு உள்ளது. கருவறையின் வடக்கு சுவர் இடிந்துவிட்டது. முன் மண்டபத்தின் கிழக்கு பகுதியில், மரங்கள் முளைத்து, சுவரை பிளந்துள்ளன.

இதுபோன்ற, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய சான்றுகள் ஒவ்வொன்றாக அழிந்தால், நம் சந்ததியினருக்கு வரலாறே இல்லாமல் போய்விடும் நிலை உருவாகும். உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடும் இந்நாளில், பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க, நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: