காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு!

காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு!

காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு!

காவிரி நீர் மேலாண் ஆணையம் அமைவதற்கான அறிவிப்பை, மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், தென்மேற்குப் பருவமழை இரண்டு தினங்களுக்கு முன்னரே தொடங்கிய நிலையில் மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த பணியை மத்திய அரசு தொடங்காமல் இருந்துவந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இந்தநிலையில், தற்போது மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு மத்திய நீர்வளத்துறை பரிந்துரைக் கடிதம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறையின் பரிந்துரைக் கடிதத்தில், `காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கையெழுத்திட்ட அறிவிப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஆணையம் இன்று(ஜூன் 01) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இருப்பார் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: