பெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது – பெங்களூர் தமிழர்கள்!

bangalore_tamil_sangam1தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என கட்டளையிட்டுள்ளதால், கர்நாடக கன்னட வெறியர்கள் சிலர் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெங்களூர் நேற்று சென்று அங்குள்ள கள நிலையை ஆராய்ந்தார். அவருடன் உலகத் தமிழர் பேரவையின் தற்காலிக பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களை சந்தித்தபோது, உச்சநீதி மன்றம் ஏற்கெனவே காவேரி குறித்து என்ன செய்ய வேண்டும் என அறிவுறித்தி இருக்கிறது. அதுபடி கர்நாடக அரசு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாங்கள் பெங்களூரில் உள்ளதால், கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உடன் படுகிறோம். பொதுவாக பெங்களூரில் உள்ளவர்கள் இந்த பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட விரும்பம் இல்லாதவர்கள். ஆனால், சில கன்னட வெறிகள் தங்களது வாகனங்கள் மீது ஏதுவும் அசம்பாவிதம் நடக்கும் என அஞ்சி, வாடகைக் கார்கள், ஆட்டோகள், பேருந்துகள் போன்ற பொது வாகனங்கள் ஓட்ட மறுக்கின்றனர். மற்றபடி தனியார் வாகனங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படும். சிறு ரோட்டோர கடைகள் வேண்டுமெனில் பயந்து கொண்டு பூட்டியிருக்கலாம். ஆனால், மாண்டியா மற்றும் மைசூரில் வேலை நிறுத்தம் வெற்றி பெற வாய்ப்புள்ளது, என்றார்.

பெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது - பெங்களூர் தமிழர்கள்!

பெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது – பெங்களூர் தமிழர்கள்!

பெங்களூரில் ஆரண்மனை வளாகத்தில் பெரிய ஆடம்பர திருமண மண்டபம் மற்றும் கூட்டுறவு வங்கி வைத்திருக்கும் மிகப்பெரிய செல்வந்தரான தமிழர் திரு. சம்பத், பெங்களூரில் மிகப் பெரிய பாதுகாப்பு முகமை வைத்துள்ள திரு. அசோன் போன்றவர்கள் பெங்களூரிலேயே பல்லாண்டுகளாக பெரிய அளவில் வணிகம் செய்து வருகின்றனர். அவர்களும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்கள் சொன்ன கருத்தை முழுமையாக ஆதரித்தனர்.

அத்தோடு. பெங்களூரில் இருக்கும் பல கன்னட அமைப்புகள் தாங்கள் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்க போவதில்லை என சொல்லியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால், பெங்களூர் பொது வாகன போக்குவரத்து மற்றும் சிறு வியாபாரிகள் தவிர்த்து இந்த பொது வேலை நிறுத்தத்தில் பாங்கெடுக்க விரும்பம் காட்டாததால், வெற்றி பெற போவதில்லை என தெரிகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: