மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த மிஸ் இந்தியா போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. பாலிவுட் பிரபலங்களான மாதுரி தீக்ஷித், கரீனா கபூர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் என நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிக்கு நடுவே 30 போட்டியாளர்கள் கலந்து கொண்ட மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது.
அனுகீர்த்தி வாஸுக்கு முன்னால் மிஸ் இந்தியா அழகியும், உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஜில்லார் அழகி பட்டத்தை சூட்டினார். பட்டம் வென்ற அனுகீர்த்தி சிறந்த மாடலாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.