உருவானது தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு!

உருவானது தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு!

உருவானது தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின்னர், `தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கண்ணகி கோயில் புனரமைப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை’ கேரள உயர்நீதிமன்றத்தில், கண்ணகி கோயிலைப் புனரமைப்பது தொடர்பாகத் தொடர்ந்த வழக்கில் விரைந்து கோயிலை புனரமைக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பையடுத்து கடந்த 28.05.2018 அன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கண்ணகி கோயில் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என கேரள தொல்லியல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அதன் பின்னர், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப தலைமையில், அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த 15.06.2018 அன்று சபரிமலையில், திருவாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமாரை சந்தித்து கோயில் புனரமைப்பு சம்பந்தமாக ஆலோசனை செய்தனர். அதன்பின்னர், நேற்று முன்தினம் (24.06.2018) மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினரையும் கேரள தேவஸம்போர்டையும் வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஓர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அவரின் ஆலோசனையின்படி, இருமாநில கோயில் கமிட்டிகளும் ஒன்றிணைந்து, கோயில் புனரமைப்புப் பணிகளை வழிநடத்திச் செல்ல ஆலோசனை பெறப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம் தேவஸம்போர்டு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், `தமிழக – கேரள மங்கலதேவி கண்ணகி கோயில் கூட்டமைப்பு’ என ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக தமிழக மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டியான டாக்டர் மு‌.இராஜேந்திரனும், செயலாளராக கேரள தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறக்கட்டளை நிர்வாகி முருகன் உடனிருந்தார். இதன் மூலம் கண்ணகி கோயில் புனரமைப்புப் பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: